விமான பயணம் மற்றும் தரைவழி மற்ற பயணங்களுடன் ஒப்பிடுகையில் ரயில் வழி பயணம் சொகுசு மட்டுமின்றி விலையும் குறைவானது ஆகும்.
எனினும் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் பெறுவது குதிரைக் கொம்பு ஆகும். முன்கூட்டியே டிக்கெட் பெறவில்லையெனில் கிடைப்பது அரிது.
இதனால் கடைசி நேரத்தில் பல குழப்பங்கள் வரலாம். கடந்த காலங்களில் தட்கல் பெறுவதிலும் சிக்கல்கள் இருந்தன. இந்தப் பிரச்னைகள் தற்போது இல்லை.
தட்கல் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுவது பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதற்கு நீங்கள் இதனைப் பின்பற்ற வேண்டும்.
- விவரங்களை தயாராக வைத்திருங்கள்
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது நேரம் முக்கியமானது. எனவே, பயணிகள் தங்கள் விவரங்களை, அதாவது தேவையான சொந்த தகவல் முதல் பயண விவரங்கள் வரை தயார் நிலையில் வைத்து, கூடிய விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் அதிகபட்ச கூட்டம் காலை 10 மணிக்கு மேல் இருக்கும்.
- முதன்மை பட்டியலை உருவாக்கவும்
IRCTC இணையதளத்தின் ‘எனது சுயவிவரம்’ பகுதிக்குச் சென்று அனைத்து பயணிகளின் தகவல்களுடன் முதன்மை பட்டியலை உருவாக்கவும்.
இந்த முதன்மைப் பட்டியல் எந்த நேரத்திலும் உங்களின் மேலும் முன்பதிவுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். நீங்கள் தட்கல் டிக்கெட் வாங்க விரும்பும் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு தனி ‘பயணப் பட்டியலை’ உருவாக்கவும்.
இந்தப் பட்டியலிலிருந்து விவரங்கள் முன்பதிவு செயல்முறையின் போது மீட்டெடுக்கப்படலாம், இது சில நிமிடங்களில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய உங்களை அனுமதிக்கிறது.
- ரயில் நிலையக் குறியீடுகளைச் சரிபார்க்கவும்
பலர் செய்யும் பொதுவான தவறு இது. ஐஆர்சிடிசி தட்கல் முன்பதிவு அமர்வைத் தொடங்குவதற்கு முன், பயணம் தொடங்கும் இடம் மற்றும் போய் சேர வேண்டிய இடம், ரயில் மற்றும் ரயில் நிலைய குறியீடுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
இதில் அதிக நேரம் எடுத்துக் கொண்டால் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
- பெர்த் விருப்பங்கள்
பின்வரும் கட்டத்தில் உங்கள் இருக்கை (பெர்த்) விருப்பத்தேர்வுகள் உங்களிடம் கேட்கப்படும், மேலும் அதைப் பற்றி சிந்திக்க உங்களுக்கு நேரம் இருக்காது. லோயர் பெர்த்தை தேர்வு செய்தால், அது கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். ஆகவே, செயல்முறையை எளிதாக்குவதற்கு பெர்த் விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil