24X7 NEFT Service: ஒரே வங்கியின் கீழ் குறிப்பிட்ட கிளைகளில் அக்கவுன்ட் வைத்திருக்கும் ஒருவர் ஆன்லைனில் நெட் பேங்கிங் மூலம் வேறு எந்த வங்கி அக்கவுன்ட் வைத்திருக்கும் தனது நண்பர்களுக்கோ, குடும்பத்தார்களுக்கோ பணத்தை அனுப்பலாம் . இதில் நெஃப்ட், ஐஎம்பிஎஸ் என பல வசதிகள் உள்ளன.
Advertisment
வெவ்வேறு வங்கிகளுக்கு இடையில் உள்ள கணக்குகளுக்கு நெஃப்ட் முறையில் பணத்தை மாற்றும்போது, ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் பகல் நேரங்களில் (திங்கள் – வெள்ளி – காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை; சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை) பணத்தை மாற்றினால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் பணம் மாறிவிடும்.
இந்த நிலையை தற்போது ஆர்பிஐ-ன் புதிய அறிவிப்பு மாற்றியுள்ளது. வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் 24 மணி நேரத்திலும் .... ஏன் ? ..... அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்த NEFT சேவையை பயனர்களுக்கு கிடைக்க செய்யுமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுருத்தியுள்ளது. இதனால், ஆத்திர அவசரங்களுக்கு இரவு நேரத்திலும் கூட இந்த NEFT சேவையை பயனர்கள் வரும் நாட்களில் அனுபவிக்க முடியும்.
"வழக்கமான வங்கி நேரங்களுக்குப் பிறகு நடக்கும் NEFT பரிவர்த்தனைகள் 'ஸ்ட்ரெய்ட் த்ரூ பிராசசிங் (எஸ்.டி.பி)' என்ற முறையை வங்கிகள் பயன்படுததி தானியங்கி பரிவர்த்தனைகளாக செயலாக்கப்படும்" என்று ரிசர்வ் வங்கி மேலும் கூறியது.