டி.வி.எஸ் தொழில் மற்றும் தளவாட பூங்காக்கள் நிறுவனம் (TVS Industrial & Logistics Parks) சூலூர் பகுதியில் வரும் பல்லடம் - கொச்சின்சாலை அருகே பன்னாட்டு உணவு துறை நிறுவனமான நெஸ்லே-வின் (NESTLE) பிரத்தியேகமான கிடங்கை தேவைக்கேற்ப 1.31 லட்சம் சதுரடியில் ம் வெறும் 4.5 மாத காலத்திற்குள் சிறப்பாக கட்டிமுடித்துள்ளது.
இந்த கிடங்கு சூலூர் பகுதியில் அமைந்திருப்பதால் தென் பகுதி சந்தைகளுக்கு இங்கிருந்து பொருள்களை எடுத்து சென்று வாடிக்கையாளர்களை அடைய வசதியாக இருக்கும்.
இந்த கிடங்கில்நெஸ்லே நிறுவனத்திற்கு தேவையான குளிரூட்டும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிக்கொள்ளவும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிட்டத்தட்ட 250 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து டி.வி.எஸ் தொழில் மற்றும் தளவாட பூங்காக்கள் நிறுவனத்தின் COO, மணிகண்டன் ராமச்சந்திரன் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய FMCG நிறுவனங்களில் ஒன்றின் கிடங்குதேவைகளை பூர்த்தி செய்யநாங்கள் உதவுகிறோம் என்பது எங்களுக்கு ஒரு பெரியமைல்கல் ஆகும்.
நாங்கள் கோவையில் இதே போலஅதிகமான கூட்டு அமைத்திடவும் இப்பகுதியில் பலரும் வேலைவாய்ப்புவழங்கிடவும் விரும்புகிறோம்," என்றார்.
நெஸ்லே இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "கோயம்புத்தூரில் உள்ள மிக சரியான இடத்தில் அமைந்துள்ள இந்த கிடங்கு எங்கள் விநியோக சங்கிலியில் ஒரு முக்கிய இணைப்பாகசெயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,
இது எங்கள் மதிப்பிற்குரிய விநியோகஸ்தர்கள் மற்றும் மதிப்புமிக்க நுகர்வோருக்குதடையற்ற மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதை உறுதிசெய்யஉதவுகிறது. 5 மாதங்களுக்குள் இதை வழங்கமுடிந்த TVS இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களுடன் கூட்டமைத்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“