வரி செலுத்துவோருக்காக ‘AIS for Taxpayer’ மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் செயலியில், TDS/TCS, வட்டி, ஈவுத்தொகை மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் தொடர்பான விரிவான பார்வை மற்றும் கருத்துக்களை அறிந்துக் கொள்ளலாம்.
இந்த மொபைல் செயலியானது வரி செலுத்துவோர் தங்கள் தகவல்களை வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் (TIS) காண அனுமதிக்கிறது.
மேலும், ‘AIS for Taxpayer’ வருமான வரித் துறையால் இலவசமாக வழங்கப்படும் மொபைல் செயலியாகும். இது Google Play மற்றும் App Store இல் கிடைக்கிறது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றில், “வரி செலுத்துவோர் தொடர்பான பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் காட்டும் AIS/TIS இன் விரிவான பார்வையை வரி செலுத்துவோருக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது” எனத் தெரிவித்துள்ளது.
இது வருமான வரித் துறையின் மற்றொரு முன்முயற்சியாகும், இது மேம்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் சேவைகளை எளிதாக்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/