முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரிலான அடல் பென்ஷன் யோஜன திட்டத்தில் சில மாற்றங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களின் சந்தா பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டி பிறகு அவருக்கு குறைந்தப்பட்சம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பென்ஷன் வழங்கப்படும்.
வரி செலுத்துவோர் கணக்கு தொடங்க அனுமதி மறுப்பு
வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய அனுமதி கிடையாது. இது தொடர்பான அறிவிப்பு நிதி அமைச்சகத்தால் 2022 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி 2022 அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்னர் ஒருவர் வருமான வரி செலுத்துவோர் எனக் கண்டறியப்பட்டு அவர் அடல் பென்ஷன் யோஜனாவில் கணக்கு வைத்திருந்தால் அந்தக் கணக்கு உடனடியாக மூடப்படும். மேலும் சந்தாதாரரிடமிருந்து திரப்பட்ட பணம் அவரிடம் ஒப்படைக்கப்படும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் இணைந்த பிறகு வருமான வரி செலுத்தினாலும் அந்தக் கணக்கு முடக்கப்பட்டு, பணம் திருப்பி செலுத்தப்படும்.
வரி செலுத்வோருக்கு ஏன் அனுமதி இல்லை
அடல் பென்ஷன் யோஜனா (ஏபிஒய்) முழுக்க முழுக்க ஏழை எளிய மக்கள் ஓய்வூதியம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.
ஆகவே குறைந்தப்பட்ட வருமான வரி செலுத்வோர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். இதனால் உங்களுக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும். இது ஓய்வுக்கு பிறகு சேமிப்பாகவும், வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கும் அளிக்கும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் யார் சேரலாம்
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 18-40 வயதுடைய நபர்கள் இணையலாம். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தபால் அல்லது வங்கி கிளைகள் மூலம் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி இந்த் திட்டத்தில் 4.01 கோடி சந்தாதார்கள் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.