ஊரடங்குல சொந்தமா கார் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சா? குறைந்த வட்டியில் லோன் தரும் வங்கி எது?

New Car loan best options with interest rates , vehicle loan: கார் லோன் வாங்க, குறைந்த வட்டி விகிதம் மற்றும் சேவைக்கட்டணம் வழங்கும் வங்கிகளின் விவரங்கள் இதோ…

எல்லோருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், முழுத்தொகையையும் செலுத்தி கார் வாங்க நம்மில் பலரால் முடியாது. அவர்கள் ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று கார் வாங்குகிறார்கள். ஆனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வாகன கடன் பெறும்போது கவனமாக செயல்பட வேண்டும்.

ஏனெனில் நீங்கள் அதிக வட்டி மற்றும் சேவைக் கட்டணத்தை செலுத்த நேரிடலாம். உங்களுக்காக சிறந்த கடன் வழங்குநர்கள் பற்றிய விவரங்கள் இங்கே.

பெரும்பாலான வாங்குபவர்கள் கார் விற்பனையார்களுடன் கூட்டுசேர்ந்த கடன் வழங்குநரிடமிருந்து கார் கடன் வாங்குகிறார்கள். வாங்குபவர் தேடும் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பது வசதியானது. இருப்பினும், வியாபாரிகளுடன் கூட்டுசேர்ந்த கடனளிப்பவரிடம் கடனுக்காக பதிவுபெறுவதற்கு முன்பு, நீங்கள் வேறு இடத்தில் குறைவான வட்டி விகிதத்தைப் பெற முடியுமா என்று சரிபார்க்கவும்.

கடனில் 1% வித்தியாசம் கூட நிறைய சேமிக்க உதவும். உங்களுக்கு ரூ.7 லட்சம் கடன் வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். கடன் வழங்குபவர் அதை ஐந்து ஆண்டுகளுக்கு 8% வட்டிக்கு வழங்குகிறார். உங்கள் சமமான மாதாந்திர தவணை (ஈஎம்ஐ), ரூ.14,194 ஆக இருக்கும், நீங்கள் மொத்தமாக செலுத்திய தொகை, ரூ.8,51,609 ஆக இருக்கும்.

அதேநேரம் உங்கள் கடனின் வட்டி விகிதம் 0.5% குறைவானதாக இருந்தால் அதாவது 7.5% வட்டியில், உங்கள் ஈ.எம்.ஐ ரூ. 14,027 ஆகவும், மொத்த கடன் தொகை, 8,41,594 ஆகவும் இருக்கும்.

கடனின் வட்டி 1% குறைவானதாக இருந்தால் அதாவது 7% வட்டியில், ஈ.எம்.ஐ ரூ 13,861 ஆகவும் மற்றும் மொத்த கடன் தொகை ரூ.8,31,650 ஆகவும் இருக்கும்.

வட்டி விகிதங்கள் ஒருபுறம் இருக்க, செயலாக்க கட்டணம் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே செயலாக்க கட்டணம் குறைவாக வசூலிக்க கூடிய வங்கிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

பொதுவாக, பொதுத்துறை வங்கிகள் மற்ற கடன் வகைகளைப் போலவே இந்த வாகன கடன் விஷயத்திலும் தனியார் துறை கடன் வழங்குநர்களை விட மலிவானவை. தற்போது, ​​பஞ்சாப் & சிந்து வங்கி 6.8% என மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குகிறது. இதேபோல், பாங்க் ஆப் பரோடா 7%, யூனியன் பாங்க் ஆப் இந்தியா 7.15%, கனரா வங்கி 7.3% வட்டி விகிதத்தில் வாகன கடன் வழங்குகின்றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் மிகக் குறைந்த விகிதம் 7.5% ஆகும்.

தனியார் வங்கிகளில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி முறையே 7.9% மற்றும் 7.95% ஆகியவற்றை மிகக் குறைந்த வட்டி விகிதமாக வழங்குகிறது.

குறைந்த செயலாக்கக் கட்டணங்களை வழங்கும் சில வங்கிகளில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ. 1,000, ஐடிபிஐ வங்கி ரூ. 2,500 மற்றும் பெடரல் வங்கி ரூ. 1,500 – 2,500 ஆகியவை அடங்கும்.

எனவே, நீங்கள் கடன் சலுகைகளை மதிப்பிடும்போது, ​​வட்டி விகிதங்கள் மற்றும் மற்ற கட்டணங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New car loan best options with interest rates vehicle loan

Next Story
பான்கார்டு இணைக்கவில்லை என்றால் 20% பிடித்தம் உண்டு; FD-யில் முதலீடு செய்ய இதை அறிந்து கொள்ளுங்கள்State bank of india, fixed deposits, interest rates, post offices bank account, SBI, FD, ICICI, FIXED DEPOSIT, INTEREST RATE, Fixed Deposit Interest Rates, SBI news, SBI news in tamil, SBI latest news, SBI latest news in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express