/indian-express-tamil/media/media_files/2025/10/14/epf-withdrawal-2-2025-10-14-20-14-18.jpg)
வேலை இழந்த பிறகு பி.எஃப் மற்றும் ஓய்வூதிய நிதியை முன்கூட்டியே முழுமையாக முடித்துக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலை இழந்த பிறகு பி.எஃப் மற்றும் ஓய்வூதிய நிதியை முன்கூட்டியே முழுமையாக முடித்துக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (ஈ.பி.எஃப்.ஓ) விதிகளில் அரசாங்கம் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், உறுப்பினர்களின் 'வாழ்க்கை எளிமையை' மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது.
இருப்பினும், இந்த முடிவுகளில் ஒரு மாற்றம், கோடிக்கணக்கான ஈ.பி.எஃப்.ஓ உறுப்பினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஈ.பி.எஃப் மற்றும் ஓய்வூதிய நிதியை முன்கூட்டியே முழுமையாக முடித்துக்கொள்வதற்கான காலக்கெடு திருத்தப்பட்டுள்ளது.
சி.பி.டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (ஈ.பி.எஃப்.ஓ) மத்திய அறங்காவலர் குழுவின் (சி.பி.டி) 238-வது கூட்டம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் திங்களன்று புதுதில்லியில் நடைபெற்றது.
இந்தப் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகக் கூறும் கூற்றுக்கு முரணான ஒரு முடிவும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே கணக்கை முடிக்கும் காலக்கெடு நீட்டிப்பு
ஈ.பி.எஃப்-ன் முன்கூட்டிய இறுதித் தீர்வுக்கான கால அவகாசத்தை தற்போதுள்ள 2 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகவும், இறுதி ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசத்தை 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாகவும் அதிகரிக்க வாரியம் நேற்று முடிவு செய்துள்ளது.
எளிய வார்த்தைகளில் சொல்வதானால், உறுப்பினர்கள் தங்கள் ஈ.பி.எஃப் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ள விரும்பினால், வேலை இழந்த பிறகு 12 மாதங்களுக்குப் பின்னரே தங்கள் வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள், மேலும் 36 மாதங்களுக்குப் பின்னரே ஈ.பி.எஸ் அல்லது ஓய்வூதிய நிதியைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
பழைய விதி மற்றும் புதிய விதியின் தாக்கம்
தற்போதுள்ள விதியின்படி, ஈ.பி.எஃப்.ஓ உறுப்பினர்கள் வேலை இழந்த 1 மாதத்திற்குப் பிறகு 75% பிஎஃப் தொகையையும், 2 மாதங்களுக்குப் பிறகு 100% தொகையையும் திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டனர்.
வேலையை இழந்த பிறகு உடனடிச் செலவுகள், இ.எம்.ஐ கட்டுதல், குழந்தைகளின் கல்வி அல்லது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கப் பணம் தேவைப்படும் வேலையில்லாதவர்களுக்கு இந்த விதி மிகவும் உதவியாக இருந்தது.
எனவே, புதிய விதியைப் பலர் கேள்வி கேட்கின்றனர். வேலை இழந்தால் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை 12 மாதங்களுக்குப் பயன்படுத்த முடியாது, ஓய்வூதிய நிதியை 36 மாதங்களுக்குப் பயன்படுத்த முடியாது. வருமானம் இல்லாத இந்தச் சமயங்களில், பிஎஃப் பணத்தை எளிதாகவும் சரியான நேரத்திலும் எடுப்பது, உறுப்பினர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
மக்கள் தங்கள் ஓய்வூதியச் சேமிப்புகளை உடனடியாகச் செலவழிப்பதைத் தடுத்து, அதைப் பாதுகாக்க அரசாங்கம் உதவ நினைக்கலாம் என்பதே இதன் நோக்கமாக இருக்கலாம். பல EPFO உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் இந்த குறிப்பிட்ட விதிக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
ஈ.பி.எஃப்.ஓ-ன் புதிய முடிவுகளில், பகுதி அளவு நிதி திரும்பப் பெறும் விதிகளை எளிதாக்குவது, திரும்பப் பெறுவதற்கான விளக்கங்களுக்கான தேவையை நீக்குதல் மற்றும் ஆன்லைன் செயல்முறையை எளிதாக்குதல் போன்ற பல நல்ல நடவடிக்கைகள் உறுப்பினர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளன.
இருப்பினும், முழு பிஎஃப் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தை நீட்டிக்கும் முடிவு விமர்சிக்கப்படுகிறது. வேலை இழந்த பிறகு தங்கள் சேமிப்பை நம்பியிருக்க வேண்டிய ஊழியர்களுக்கு இந்த புதிய நடவடிக்கை ஒரு கவலையாக உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.