RBL வங்கி ஒரு ஸ்மார்ட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது, இது 8.3% வரை கூட்டுத்தொகை வட்டியை வழங்குகிறது.
இதில் வாடிக்கையாளர்கள் வழக்கமான மாதாந்திர சேமிப்பு மற்றும் டாப்-அப் முதலீடுகளுடன் பலனைப் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சத் தொகையான ரூ. 1,000க்கு ஸ்மார்ட் டெபாசிட்டை தொடங்கி, அதே டெபாசிட்டில் கூடுதல் தொகையை நிரப்புவதற்கான விருப்பத்தைப் பெறலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி
ஸ்மார்ட் டெபாசிட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் கூட்டுத்தொகை வட்டி விகிதத்தைப் பெற முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.55%, மூத்த குடிமக்களுக்கு 8.05% மற்றும் சூப்பர் சீனியர் எஃப்டிகளுக்கு 8.30% 15 மாத கால வட்டியை வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் 50 ரூபாய்க்கு குறைவான தொகையில் டாப்-அப் செய்யலாம்.
சிறப்பு அம்சங்கள்
- நல்ல வருமானத்துடன் எளிதான முதலீடு
- முன்பதிவு காலம் - 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை
- முன்பதிவு தொகை - குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 5,00,000
முதிர்வு காலத்துக்கு முன் திரும்ப பெற்றால்..
முதிர்வு காலத்துக்கு முன் பணத்தை திரும்பப் பெறும்போது, வங்கியில் ஸ்மார்ட் டெபாசிட் இருக்கும் காலத்திற்குப் பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும்.
முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு 1% அபராதம் விதிக்கப்படும். ஆனால் மூத்த குடிமக்கள் அல்லது சூப்பர் மூத்த குடிமக்கள் ஸ்மார்ட் டெபாசிட்டை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு அபராதம் எதுவும் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/