New Form 26AS: வருமான வரி செலுத்துவோர், கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், ‘26 ஏஎஸ்’ என்ற படிவம், மேம்படுத்தப்பட்டு புதிய படிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரியத்தின் ஆணையர் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் (ஊடகம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை) சுராபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருமான வரி செலுத்துவோர், கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், ‘26 ஏஎஸ்’ என்ற படிவம், மேம்படுத்தப்பட்டு, புதிய படிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையில் மட்டும் எஸ்பிஐ தான் டாப்! ஏன் தெரியுமா?
இதனால், வருமான வரி கணக்கு தாக்கலை, முகமறியாமலும், விரைவாகவும், சரியாகவும், மின்னணு முறையில், தாக்கல் செய்ய முடியும். நடப்பு மதிப்பீட்டு ஆண்டிலிருந்து, மேம்பட்ட படிவம் 26 ஏஎஸ் படிவத்தை, வரி செலுத்துவோர் பயன்படுத்தலாம். இது வரி செலுத்துவோரின், நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான, சில கூடுதல் விவரங்களை பதிவிடும் வகையில், பல்வேறு பிரிவுகளில், சிறப்பு நிதி பரிவர்த்தனை அறிக்கையில் (எஸ் எப்.டி) குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கைகள் வாயிலாக, கணக்கு தாக்கல் செய்வோரிடமிருந்து பெறப்படும் தகவல்கள், தற்போது, படிவம் ‘26 ஏஎஸ்’ஸில் இணைக்கப்பட்டுள்ளன. இது தன்னார்வ உடன்பாடு, வரி பொறுப்புடைமை, மற்றும் மின்னணு மூலம் தாக்கல் செய்யும் முறை (இ-பைலிங்) போன்றவை இதன் வாயிலாக எளிமையாகிறது.
ஆரோக்கியமான சூழலில், சரியான வரிப் பொறுப்பைக் கணக்கிடுவதன் மூலம் வரி செலுத்துவோர் அல்லது அவரது வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் இந்த படிவத்தை பயன்படுத்தலாம். இது, வரி நிர்வாகத்தில் மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டுவரும்.
முந்தைய ‘26 ஏஎஸ்’ படிவத்தில் பிடித்தம் செய்யப்படும் வரி மற்றும் ஒரு பான் கார்டு வாயிலாக சேகரிக்கப்பட்ட வரி தொடர்பான தகவல்களை வழங்க பயன்படுகிறது. மேலும், செலுத்தப்பட்ட பிற வரி விவரங்கள், பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் டி.டி.எஸ். இயல்புநிலை உள்ளிட்ட சில கூடுதல் தகவல்களையும் பெற முடியும். ஆனால், தற்போதைய ‘26ஏஎஸ்’ படிவம், வரி செலுத்துவோர் தங்களின் அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளையும் நினைவுகூற உதவும் வகையில் சிறப்பு நிதி பரிவர்த்தனை அறிக்கைகளைக் கொண்டிருக்கும்.
ஆகஸ்ட் 1 முதல் பிரபல வங்கிகளில் அதிரடி மாற்றம்.. 20 முதல் 500.ரூ வரை கட்டணங்கள்!
ரொக்க வைப்பு, வங்கிக் கணக்குகளைச் சேமிப்பதில் இருந்து திரும்பப் பெறுதல், அசையாச் சொத்துகளை விற்பனை செய்தல், வாங்குதல், நேரடி வைப்பு, கிரெடிட் கார்டு செலுத்துதல், பங்குகளை வாங்குதல், கடன் பத்திரங்கள், வெளிநாட்டு நாணயம், பரஸ்பர நிதிகள், திரும்ப வாங்குவது போன்ற தகவல்கள் விளக்கப்பட்டுள்ளது. பங்குகள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணப்பரிமாற்றம், முதலியன வங்கிகள், பரஸ்பர நிதிகள், பத்திரங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பதிவாளர்கள் அல்லது துணை பதிவாளர்கள் போன்ற ‘குறிப்பிட்ட நபர்களிடமிருந்து’ வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 285 பிஏ கீழ், உயர்ந்த நபர்களைப் பொறுத்தவரை 2016 நிதியாண்டு முதல் நிதி பரிவர்த்தனைகளை மதிப்பிட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Ok
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?