வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை தொடங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டோ விண்ணப்பத்தை பெறலாம்.

indian,overseas,bank,சேவை,இந்தியன், ஓவர்சீஸ், வங்கி
indian,overseas,bank,சேவை,இந்தியன், ஓவர்சீஸ், வங்கி

இந்தியாவில் சிறந்த சேவைகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கி வருகின்றது. அதிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வழங்கும் லோன் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும்.இந்நிலையில், ஓவர்சீஸ் வங்கி ரூ. 10 லட்சம் வரை கல்வி கடன் வழங்கி வருகின்றது.

ஆனால் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரையில் வழங்குகின்றது. இதில் 12.25 விழுக்காடு வட்டியுடன் ரூ. 4 லட்சம் வரை கடன் வழங்குகின்றது, அதற்கு மேற்பட்ட தொகைக்கு 13.50 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவிலேயே படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 4 லட்சத்துக்கும் மேல் 5 விழுக்காடும் வழங்கப்படும். அதுவே வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கென்றால் 15 விழுக்காடு முன்தொகையாகச் செலுத்த வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வழங்கும் இந்த கல்விக்கடன் திட்டத்தில் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை.

இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய காலம்….

படிப்பு முடிந்த 6 முதல் 12 மாதங்களுக்கு பின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்விக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தலாம்.இது 5ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் சம அளவிலான மாதத் தவணைகளில் செலுத்த வேண்டும் என்பது விதி.

மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்திற்குச் சென்று எம்.எஸ்.வேர்ட் (M.S.Word) ஆவண வடிவிலான கடன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடமோ, அல்லது அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டோ விண்ணப்பத்தை பெறலாம்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New loan offer from indian overseas bank

Next Story
மக்கள் சார்ந்த கொள்கைகளை பின்பற்ற பாஜக அரசு தயாராக இல்லை: மன்மோகன் சிங்To fix economy one must know what is wrong former pm Manmohan Singh on Nirmala Sitharaman - 'பொருளாதாரத்தை சரி செய்வதற்கு முன் பிரச்சனை என்னவென்று தெரிய வேண்டும்' - மன்மோகன் சிங் அட்டாக்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com