New Monthly Income Scheme Account: மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் டிசம்பர் 12, 2019 தேதி, தேசிய சேமிப்பு (மாத வருமான கணக்கு) திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். இந்த வைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.5700 என்ற மாத வருமானத்தை உறுதி செய்யும். அல்லது, ஐந்தாண்டுகளில், கூட்டு மாத வருமான திட்டக் கணக்கில் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்ய வட்டியாக ரூ.5700 × 60 = ரூ.3,42,000 சம்பாதிக்கலாம். ஒரு மாத வருமான திட்ட கணக்கில் அதிகபட்ச வைப்பு வரம்பு ரூ 4.5 லட்சம். இந்த வைப்பு உங்களுக்கு மாத வருமானம் ரூ.2850 வழங்கும். ஒரு மாத வருமான திட்ட கணக்கில் ரூ 4.5 லட்சத்தை டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் இந்த மொத்த வட்டி ரூ.2850 × 60 = ரூ 171,000 ஆகும்.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
SBI YONO app: டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - இன்னமும் தெரிஞ்சுகாம இருந்தா எப்படி?
படிவம் 1 விண்ணப்பம் செய்வதன் மூலம், ஒரு தனி நபரால் இந்த கணக்கு திறக்கப்படலாம்; கூட்டு பெயர்களில் அதிகபட்சம் மூன்று நபர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம். 10 வயதை எட்டியோருக்கு அவரின் சார்பாக யார் காப்பாளரோ அவர் மூலம் திறக்கலாம். அதேபோல், a person of unsound mind என்று அழைக்கப்படக் கூடியவர்களுக்கும் காப்பாளர் மூலம் கணக்கு திறக்கலாம்.
| a person of unsound mind என்றால் என்ன? - "மனநிலை பாதிப்பு அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்" என்று சொல்லலாம். இங்கிலாந்தின் Mental Treatment act மூலம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு a person of unsound mind என்ற அழைப்பு கொடுக்கப்பட்டது |
அதிகபட்ச டெபாசிட் வரம்பின் உச்சவரம்புக்கு உட்பட்டு இந்த திட்டத்தின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே கணக்காகவோ அல்லது கூட்டுக் கணக்காவோ நீங்கள் பயன்படுத்தலாம்
குறைந்தபட்சம் ரூ .1000 வைப்புத்தொகை கொண்டோ அல்லது ஆயிரம் ரூபாய்க்கு மேல் எந்தவொரு தொகையும் கொண்டோ கணக்கை திறக்கலாம். மேலும் ஒரு கணக்கில் ஒரே ஒரு வைப்புத்தொகை மட்டுமே இருக்கும்.
ஒரு கணக்கில் அதிகபட்சம் ரூ 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூட்டுக் கணக்கில் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஒரு தனிநபருக்காக அனைத்து கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை ரூ .4.5 லட்சத்தை தாண்டக் கூடாது. கூட்டுக் கணக்கில் ரூ.9 லட்சத்தை தாண்டக் கூடாது.
வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு எஸ்.பி.ஐ அறிவித்த மகிழ்ச்சி செய்தி...
வட்டி வீதம்: இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் வைப்புத் தொகைக்கு 7.6 சதவிகிதம் வட்டி கிடைக்கும். அதாவது, ஓராண்டுக்கு. வைப்புத் தேதியிலிருந்து ஒரு மாதம் முடிந்ததும் கணக்கு வைத்திருப்பவருக்கு வட்டி செலுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் வட்டியை கணக்கு வைத்திருப்பவர் Claim செய்யாவிட்டால், அத்தகைய வட்டி கூடுதல் வட்டியை ஈட்டாது.
இந்த கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் முடிந்த பிறகு, எந்த நேரத்திலும் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறவும், கணக்கை மூடவும் கணக்கு வைத்திருப்பவருக்கு அனுமதிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.