Indian Railways: நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொள்பவராக இருந்தால், புதிய ரூல்ஸ்களை தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் செய்யும் சிறிய தவறும், மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும்.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியன் ரயில்வே சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, இரவு நேர ரயில் பயணம் மேற்கொள்பவருக்காக தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய ரூல்ஸ்படி, ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேச மற்றும் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிகள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, ரயில்வே புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, இரவு நேரத்தில் பயணிகள் பேசிக்கொண்டு, சத்தமாக பாட்டு கேட்பவதாகவும் பல பயணிகள் புகார் அளித்ததையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இரவு 10 மணிக்கு பிறகு பயணிகள் லைட் ஆஃப் செய்வதில்லை என்பதால், தூக்கம் பாதிக்கப்படுவதாக பயணிகள் புகாரளித்துள்ளனர்.
ரயில்வேயின் புதிய நடைமுறைகளை மீறிவோரு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ரயில்வே எச்சரித்துள்ளது.
பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனே ரயில்வே போலீசார்,டிக்கெட் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil