மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – SCSS வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு தகவல்கள்

தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) தொடர்பான அனைத்து தகவல்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இவை முதியவர்களுக்கான வருமானத்திற்கு உதவுகிறது.

author-image
WebDesk
New Update
SCSS

New scheme by postal department for senior citizens: இந்திய தபால் துறையின் சார்பாக SCSS என்ற சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது இதன் பொருள். இதில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அந்த வகையில், இத்திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு தற்போதைய நிலவரப்படி, 8.2 சதவீத வட்டி, வருமானமாக கிடைக்கப்பெறுகிறது. மற்ற அரசு திட்டங்களுடன் ஒப்பிடும் போது, இதன் வட்டி விகிதம் அதிகம் என்று அறியப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யும் போது, ஆண்டுக்கு சுமார் ரூ. 2 லட்சத்து 46 ஆயிரம் வட்டியாக பெறப்படுகிறது. இந்த தொகையை மாதக்கணக்கில் கணக்கிட்டால் ரூ. 20 ஆயிரத்து 500 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக இந்த திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 15 லட்சமாக இருந்தது. இதனை, ரூ. 30 லட்சத்திற்கு தற்போது உயர்த்தியுள்ளனர். மேலும், இதன் முதிர்வு காலமான 5 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுளது.

Advertisment
Advertisements

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 55 வயது முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதற்கான கணக்கை தொடங்குவதற்கு தபால் அலுவலகம் அல்லது வங்கியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் வரிக்கு உட்பட்டது என்றாலும், சில வரி சேமிப்பு வசதிகள் இதில் கிடைக்கின்றன. மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதால் இது முற்றிலும் பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டம் மூலமாக ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக அதன் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்வது அவசியம். ஓய்வுக்கு பின்னர் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை பெற விரும்புபவர்கள் ஆகிறோர் இத்திட்டத்தை பரிசீலிக்கலாம்.

Savings Scheme Post Office Savings Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: