2023-ல் அறிமுகமாகும் புதிய சொகுசு கார்கள்.. விலை உள்ளிட்ட விவரங்கள் இதோ!

2023ல் புதிய சொகுசு கார்கள் சந்தையில் நுழைகின்றன.

New SUVs launching in 2023
2023ல் அறிமுகமாக உள்ள புதிய கார்கள்

2023ல் புதிய சொகுசு கார்கள் சந்தையில் நுழைகின்றன. இதன் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து தொடங்கி, ரூ.20 லட்சத்துக்குள் காணப்படுகிறது.
இந்தக் கார்கள் மு(ழுவதும் நவீனமயமான பல்வேறு வசதிகளை கொண்டுள்ளன. இக்கார்களின் விவரங்கள், விலை உள்ளிட்ட தகவல்களை காணலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta facelift)

ஹூண்டாயின் மிகவும் பிரபலமான ஒரு மிட்-லைஃப் அப்டேட்டிற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் புதிய அம்சங்கள் மற்றும் புதிய வெளிப்புற வடிவமைப்பு கூறுகள் இடம்பெறும்.

இன்ஜின் தேர்வுகளில்களில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை அடங்கும். இந்தக் கார்கள் இந்தாண்டின் மத்திய பகுதியில் அறிமுகமாக உள்ளன.

கார்களின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

Citroen C3 7-சீட்டர் (Citroen C3 7-seater)

2023 பிற்பகுதியில் அறிமுகமாகும் இந்தக் காரின் விலை ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சிட்ரோயன் C3 இன் ஏழு இருக்கைகள் கொண்ட பதிப்பு, நிலையான C3 உடன் ஒப்பிடும் போது சற்று அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் முரட்டுத்தனமான பாடி கிளாடிங்குடன் சோதனை செய்யப்பட்டுள்ளது.

C3 Aircross, C3 Sport Tourer அல்லது C3 Sport Tourer என அழைக்கப்படும் இந்த C3 7-சீட்டர் இந்த விலையில் Renault Triber மற்றும் Kia Carensக்கு போட்டியாக இருக்கும்.

1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இது இயக்கப்படும். eC3 என்று அழைக்கப்படும் C3 இன் மின்சார பதிப்பும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்க்கா 5-கதவு (Force Motors Gurkha 5-door)

2023 தொடக்கத்தில் அறிமுகமாகும் இந்தக் கார்கள் விலை ரூ.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட மெர்சிடிஸ்-ஆதார 2.6-லிட்டர் டீசல் எஞ்சினைப் பெறுகிறது.

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

நடப்பு ஆண்டில் மத்தியில் அறிமுகமாகும் இந்தக் கார்களின் விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை காணப்படும்.

Kia Seltos ஃபேஸ்லிஃப்ட் புதிய அலாய் வீல்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பானட், ஹெட்லேம்ப்கள், புதிய டெயில்-லேம்ப் வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் ஆகியவற்றுடன் முழுமையான மாற்றத்தைப் பெறும்.

கேபினில் புதிய அப்ஹோல்ஸ்டரி, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் காஸ்மெட்டிக் அப்டேட்கள் உள்ளன.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector facelift)

ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் இந்தக் கார்களின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும். எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காஸ்மெட்டிக் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

SUV புதிய 14-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுவதால், கேபினில் மிக முக்கியமான மாற்றம் இருக்கும்.

டேஷ்போர்டில் புதிய கிடைமட்ட ஏசி வென்ட்கள் மற்றும் சென்டர் கன்சோலுக்கான வடிவமைப்பு ஆகியவை இடம்பெறும்,

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: New suvs launching in 2023

Exit mobile version