H-1B விசா: ஊதியத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்வு முறை சர்ச்சைக்குரியது ஏன்? – என்.எஃப்.ஏ.பி அறிக்கை விளக்கம்

டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட H-1B ஊதிய அடிப்படையிலான லாட்டரி முறைக்கு தேசிய அமெரிக்கக் கொள்கை அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட H-1B ஊதிய அடிப்படையிலான லாட்டரி முறைக்கு தேசிய அமெரிக்கக் கொள்கை அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
H1B US FE Online

முன்மொழியப்பட்ட H-1B ஊதிய அடிப்படையிலான லாட்டரி சட்டவிரோதமானது என்றும் தொழிலாளர் துறையால் வரையறுக்கப்பட்ட திறன் நிலைகளை தவறாகப் புரிந்துகொள்வதாகவும் என்.எஃப்.ஏ.பி கூறுகிறது. Photograph: (FE Online)

தேசிய அமெரிக்கக் கொள்கை அறக்கட்டளை (என்.எஃப்.ஏ.பி -NFAP) முன்மொழியப்பட்ட H-1B ஊதிய அடிப்படையிலான லாட்டரி சட்டவிரோதமானது என்றும், தொழிலாளர் துறையால் வரையறுக்கப்பட்ட திறன் நிலைகளை தவறாகப் புரிந்துகொள்கிறது என்றும் கூறுகிறது.

Advertisment

H-1B லாட்டரி முறையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரவிருக்கின்றன. அமெரிக்க நிறுவனங்களால் வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவதில் சீர்திருத்தம் கொண்டுவரும் முயற்சியாக, டிரம்ப் நிர்வாகம் ஒரு H-1B ஊதிய அடிப்படையிலான தேர்வு நடைமுறையை முன்மொழிந்துள்ளது.

புதிய ஊதிய அடிப்படையிலான முறை, ஊதியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒதுக்கீட்டு செயல்முறையை நிறுவி, தொழிலாளர்களின் வருவாயின் அடிப்படையில் H-1B பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். அதாவது, அமெரிக்க நிறுவனம் எவ்வளவு அதிக ஊதியம் வழங்குகிறதோ, அந்தத் தொழிலாளிக்கு H-1B விசா கிடைப்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவு அதிகமாக இருக்கும்.

என்.எஃப்.ஏ.பி கூறும் சர்ச்சைக்குரிய 2 காரணங்கள்:

தேசிய அமெரிக்கக் கொள்கை அறக்கட்டளை ((என்.எஃப்.ஏ.பி) வெளியிட்ட அறிக்கை, இந்த முன்மொழியப்பட்ட விதி குறைந்தது 2 காரணங்களுக்காகச் சர்ச்சைக்குரியது என்று கூறுகிறது:

Advertisment
Advertisements

சட்டப்பூர்வமான சிக்கல்: H-1B மனுக்களை சீனியாரிட்டி (பணிமூப்பு) அல்லது சம்பளத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க யு.எஸ்.சி.ஐ.எஸ்-க்கு (USCIS) (அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள்) சட்டம் அனுமதிக்கவில்லை.

திறன் நிலையைத் தவறாகப் பயன்படுத்துதல்: H-1B மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, முன்மொழியப்பட்ட விதி குறிப்பிடுவது போல, உண்மையில் திறன் நிலையை அளவிடவில்லை. மாறாக, அந்தப் பணியில் ஈடுபடத் தேவையான அனுபவம் மற்றும் அது தொடர்பான காரணிகளின் அடிப்படையில் வேலைப் பிரிவுகளைப் பிரிக்கப் பயன்படும் தொழிலாளர் துறையின் (Department of Labor - DOL - டி.ஒ.எல்) ஒரு கருவியாகும்.

என்.எஃப்.ஏ.பி அறிக்கை மேலும் கூறுவதாவது:

ஊதிய நிலைகளை (Prevailing wages) தீர்மானிக்க, முதலாளிகள் டி.ஒ.எல்-ன் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய புள்ளிவிவரங்கள் (ஓ.இ.டபிள்யூ.எஸ் - OEWS) அமைப்பைப் பயன்படுத்துகின்றனர். இந்தத் தரவுகள் (I–IV) நான்கு ஊதிய நிலைகளை உருவாக்க 2004-ல் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்துகின்றன.

திறன் Vs அனுபவம்:

என்.எஃப்.ஏ.பி அறிக்கையில் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர் விக் கோயல் (Vic Goel) கூறுகையில், “தொழிலாளர் துறையின் ஓ.இ.டபிள்யூ.எஸ் ஊதிய நிலைகள் (I–IV) ஒரு தொழிலாளி 'அதிக திறமையானவரா' அல்லது 'குறைந்த திறமையானவரா' என்பதை மதிப்பிடுவதற்கானது அல்ல. மாறாக, ஒரு பணிக்குத் தேவைப்படும் அனுபவம், மேற்பார்வை மற்றும் பொறுப்பின் அளவைப் பிரதிபலிக்கும் ஒரு வேலை வகைப்பாட்டுக் கருவியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.”

நிலை I (Level I) என்பது அந்தத் தொழிலின் ஆரம்ப நிலை (entry-level) பதிப்பாகும். இது புதிய சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமாக இருக்கும்.

நிலை IV (Level IV) என்பது அதிக முடிவெடுக்கும் திறன் மற்றும் சுதந்திரம் தேவைப்படும், பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் அல்லது மேலாளர்கள் போன்ற மூத்த நிலை (senior-level) பதவியாகும்.

இருப்பினும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) இந்த வகைகளை அதன் சொந்த கொள்கை நோக்கங்களுக்காக மாற்றி வடிவமைக்க முயற்சி செய்கிறது. முன்மொழியப்பட்ட விதியில், அதிக ஊதிய நிலைகள் அதிக திறனுக்கும் (Higher skill) அதிக பொருளாதார மதிப்புக்கும் சமம் என்று யு.எஸ்.சி.ஐ.எஸ் பரிந்துரைக்கிறது. மேலும், நிலை III மற்றும் IV பிரிவினருக்கு லாட்டரியில் முன்னுரிமை அளிப்பதை நியாயப்படுத்த இந்த சட்டகத்தைப் பயன்படுத்துகிறது.

கோயல் விளக்குகையில், இந்த இரண்டு அமைப்புகளும் இணக்கமானவை அல்ல. DOL ஊதிய நிலைகள், வேலைத் தேவைகளுக்கு ஏற்ப நியாயமான ஊதியத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், “யு.எஸ்.சி.ஐ.எஸ் லாட்டரிக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அதே நிலைகளை 'திறமை' மற்றும் 'சிறந்த மற்றும் புத்திசாலித்தனம்' என்பதற்கான ஒரு கருவியாக மாற்ற முயற்சி செய்கிறது”  என்று அவர் கூறினார்.

சம்பள நிலைகள் பொதுவாக ஒரு பதவிக்குத் தேவைப்படும் அனுபவத்தின் அளவால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

H1b Visa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: