எதிர்மறையான வர்த்தகத்திற்குப் பிறகு, உள்நாட்டு குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை லேசான லாபத்துடன் அமர்வை முடித்தன.
அதன்படி, நிஃப்டி 17.8 புள்ளிகள் அதிகரித்து 18,314.8 ஆகவும், சென்செக்ஸ் 123.4 புள்ளிகள் உயர்ந்து 62,027.9 ஆகவும் முடிந்தது.நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
தொடர்ந்து, நிஃப்டி மிட்கேப் 50 0.5% குறைந்து காணப்பட்டது. நிஃப்டி ஸ்மால்கேப் 50 0.78% இழந்து காணப்பட்டது. துறைசார் குறியீடுகள் சிறப்பாக செயல்பட்டன. வங்கி நிஃப்டி 0.8% உயர்ந்தது, அதே நேரத்தில் நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பிஎஸ்யூ வங்கி, நிஃப்டி நுகர்வோர் டூரபிள்ஸ் அனைத்தும் உயர்வில் முடிந்தன.
இதற்கிடையில், நிஃப்டி மெட்டல், 1.8% சரிந்தது; நிஃப்டி மீடியா 1.08% மற்றும் நிஃப்டி IT 0.3% குறைந்து காணப்பட்டது.
நிஃப்டி, சென்செக்ஸ் வாராந்திர லாபம்
கடந்த வாரத்தில் என்எஸ்இ நிஃப்டி 50 1.34 சதவீதமும், பிஎஸ்இ சென்செக்ஸ் 1.5 சதவீதமும் அதிகரித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“