இந்திய பங்குச் சந்தைகள், புதன்கிழமை (செப்.7) வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு 168.08 புள்ளிகள் சரிந்து 59028.91 எனவும், தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ. குறியீடு 31.2 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு 17624.40 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்த நிலையில் பி.எஸ்.இ.,யில் அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்து ரூ.6767.95 எனவும், டிசிஎஸ் பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்து 893.85 எனவும், சன் பார்மா பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்து ரூ.893.85 எனவும் விப்ரோ பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்து ரூ.407.35 எனவும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்து ரூ.7162.05 எனவும் காணப்பட்டன.
அதேநேரத்தில் இன்டஸ்இந்த் வங்கி, எம் அண்ட் எம் நிறுவன பங்குகள், மாருதி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டன. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தட்டில் ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா மற்றும் கிராஸிம் நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, இன்டஸ்இந்த் வங்கி, எம் அண்ட் எம் மற்றும் மாருதி சுசூகி நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல் பங்குகள் ரூ.753.05 எனவும் எஸ்பிஐ பங்குகள் ரூ.532.25 எனவும் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil