இன்றைய பங்கு வர்த்தகத்தை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ உயர்வுடன் நிறைவு செய்தன.
இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வீழ்ச்சியுற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை உயர்வுடன் நிறைவு செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1615 (2.79%) உயர்ந்து வணிகமாகின. தேசிய பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிஃப்டி 456.35 (2.64%) புள்ளிகள் அதிகரித்து 17,769.30 என வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ 59,588.07 ஆக உயர்வுடன் காணப்பட்டது. பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளும் உயர்வுடன் வணிகமாகின. தேசிய பங்குச் சந்தையில் அதானி போர்ட், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் அதிக லாபத்தில் வணிகமாகின.
அதேபோல் மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல் பங்குகள் அதிக லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் சந்தை உயர்ந்த போதிலும் ஏர்டெல் பங்குகள் சரிவை சந்தித்தன. அதன்பின்னர், தொடர்ச்சியான வர்த்தகத்தில் ஏர்டெல் பங்குகள் உயர்ந்தன. தற்போது ஏர்டெல் பங்குகள் ரூ.725.60 காசுகளாக உள்ளன. இந்தப் பங்குகள் இன்று ரூ.4.70 (0.65) அதிகரித்தன.
நாளை விடுமுறை
நாளை விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை (ஆக.31) என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பங்குச் சந்தைகள் பிஎஸ்இ சென்செக்ஸ் 1500 புள்ளிகளும், நிஃப்டி 400 புள்ளிகளுக்கு அதிகமாகவும் உயர்வை கண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“