இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் உயர்வுடன் காணப்பட்டன. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 379.43 (0.64%) புள்ளிகள் பங்குகள் உயர்ந்து காணப்பட்டது.
அதிகப்பட்சமாக ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் 71.55 சதவீதம் லாபத்தில் வர்த்தகமாகின. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.3497.55 ஆக உள்ளது. இதேபோல் ஆக்ஸிஸ் வங்கி (ரூ.765.45), பஜாஜ் பின்சர்வ் ரூ.15914, டாக்டர் ரெட்டிஸ் லேப் ரூ.4296, ஹெச்சிஎல் டெக் பங்குகள் ரூ.959 லாபத்தில் வர்த்தகமாகின.
மேலும் பஜாஜ் பைனான்ஸ் (0.26 சதவீதம்), பார்தி ஏர்டெல் (0.85 சதவீதம்), என்டிபிசி (0.03 சதவீதம்), எஸ்பிஐ (0.90 சதவீதம்) மற்றும் டிசிஎஸ் (0.20 சதவீதம்) சரிவை கண்டன.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 127.10 (0.72 சதவீதம்) புள்ளிகள் அதிகரித்து 17,825.25 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதிகப்பட்சமாக அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் லாபத்திலும், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நஷ்டத்திலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil