இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் நேர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் பச்சை நிறத்தில் வர்த்தகமாகின.
சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் (SGX) நிஃப்டி ஃபியூச்சர்ஸ் இன்றைய அதிகாலை வர்த்தகத்தில் 24 புள்ளிகள் அல்லது 0.13% உயர்ந்து 18,703 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆசிய சந்தைகள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் வர்த்தகமாகின. ஹாங்காங்கின் ஹாங் செங் 1.25%, சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.46%, தென் கொரியாவின் KOSPI 0.30% உயர்ந்தது.
எனினும், ஜப்பானின் நிக்கேய் 225 1.49% சரிந்தது. தொழில்நுட்பம் சார்ந்த நாஸ்டாக் 0.36% அதிகரித்தது.
இந்திய துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 62.90 புள்ளிகள் அல்லது 0.14% உயர்ந்து 44,164.55 ஆகவும், நிஃப்டி ஆட்டோ 159.25 புள்ளிகள் அல்லது 1.09% உயர்ந்து 14,729.50 ஆகவும் காணப்பட்டது.
நிஃப்டி ரியாலிட்டி 5.85 புள்ளிகள் அல்லது 1.19% உயர்ந்து 498.40 ஆகவும், நிஃப்டி ஐடி 549.70 புள்ளிகள் அல்லது 1.88% குறைந்து 28,689.05 ஆகவும் இருந்தது.
தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை +350.08 (0.56%) உயர்ந்து, 63,142.96 ஆகவும், என்எஸ்இ 127.40 (0.68%) உயர்ந்து 18,726.40 ஆகவும் காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“