உலகளாவிய கலவையான குறிப்புகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சரிந்தன. ஆரம்ப வீழ்ச்சிக்குப் பிறகு, நிஃப்டி அமர்வின் பெரும்பகுதி மந்தமாக வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, நிஃப்டி 0.61% சரிந்து 18,286.50ல் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 112.35 புள்ளிகள் அல்லது 0.61% குறைந்து 18,286.5 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 413.24 புள்ளிகள் அல்லது 0.66% சரிந்து 61,932.47 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 168.40 புள்ளிகள் அல்லது 0.38% சரிந்து 43,903.70 ஆகவும், நிஃப்டி ஆட்டோ 130.15 புள்ளிகள் அல்லது 0.93% சரிந்து 13,877.70 ஆகவும் காணப்பட்டது.
எனினும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 28.90 புள்ளிகள் அல்லது 0.72% உயர்ந்து 4,049.70 ஆக இருந்தது.
நிஃப்டி PSU வங்கி 28.90 புள்ளிகள் அல்லது 0.7049 ஆகவும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையில், பிபிசிஎல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் என்டிபிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், கோடக் வங்கி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மாருதி சுசுகி ஆகியவை நஷ்டமடைந்தன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஓரளவு லாபத்துடன் முடிவடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“