Advertisment

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: சம்பவம் செய்த பொதுத்துறை வங்கி பங்குகள்!

Share Market News Today : பங்குச் சந்தை குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் வியாழக்கிழமை சரிவுடன் முடிவடைந்தன.

author-image
WebDesk
New Update
Nifty settles below 19350 Sensex tanks 500 pts

சென்செக்ஸ் 0.6% சரிந்து 65,151.02 ஆக காணப்பட்டது.

Share Market Highlights: இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஆக.17) அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் எதிர்மறையாக காணப்பட்டன. தொடர்ந்து, சென்செக்ஸ் 0.6% சரிந்து 65,151.02 ஆகவும், நிஃப்டி 50 100 புள்ளிகள் குறைந்து 19,365.25 ஆகவும் முடிவடைந்தது.

Advertisment

பேங்க் நிஃப்டி 0.13% சரிந்து 43,900க்கு கீழ் நிலைத்தது. இருப்பினும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.43% உயர்ந்தன.
நிஃப்டி ஆயில் & கேஸ் 0.83% குறைந்து, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.89%, நிஃப்டி ஐடி 0.49% சரிந்தன. பரந்த சந்தைகளில், நிஃப்டி மிட்கேப் 100 0.25% அதிகரித்தது.

இந்த நிலையில் அதானி, ஜேகே சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் லாபம் கண்டன. ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி 3 சதவீதம் வரை சரிவை கண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment