இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி வெள்ளிக்கிழமை கடுமையான வீழ்ச்சிகளுடன் முடிவடைந்தன.
அந்த வகையில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 1% சரிந்து 17,412 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 59,135 ஆகவும் முடிவடைந்தன.
நிஃப்டி லாப, நஷ்டம்
வங்கி நிஃப்டி 1.87% சரிந்து 40,485.45-ல் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 குறியீட்டில் அதானி எண்டர்பிரைசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, HDFC வங்கி, HDFC மற்றும் ICICI வங்கி ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
இதற்கிடையில், சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகளில் ஏற்பட்ட 60% சரிவால் வங்கிப் பங்குகளில் வீழ்ச்சி காணப்பட்டது.
மறுபுறம், டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ மற்றும் எம்&எம் ஆகியவை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் லாபம் பெற்றன.
தங்கம்
தங்கத்தின் விலைகள் கடந்த கால அமர்வில் 5 நாள்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்தன. இதற்கிடையில், வேலையில்லா தரவு அச்சானது டாலர் குறியீட்டை 3 மாத உயர்விலிருந்து கீழே இழுத்துச் சென்றது, இது பொன் விலையை உயர்த்தியது.
எனினும், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை அழுத்தத்தில் உள்ளது,
ஐ.டி. பங்குகள்
Coforge, LTIMindtree, L&T Technology Services மற்றும் Mphasis ஆகியவை அதிகமாக சரிந்தன. Coforge 2.71% சரிந்து 4,140 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/