மும்பை, தேசிய பங்குச் சந்தை வியாழக்கிழமை (ஏப்.27) வர்த்தக அமர்வை லாபத்தில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 101.45 புள்ளிகள் அல்லது 0.57% உயர்ந்து 17,915.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 348.80 புள்ளிகள் அல்லது 0.58% உயர்ந்து 60,649.38 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகள்
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 170.95 புள்ளிகள் அல்லது 0.40% உயர்ந்து 43,000.85 ஆக காணப்பட்டது. அதேபோல், , நிஃப்டி ஆட்டோ 99.05 புள்ளிகள் அல்லது 0.76% உயர்ந்து 13,071.8 ஆகவும், நிஃப்டி ஐடி 290.25 புள்ளிகள் அல்லது 1.275% ஆகவும் உயர்ந்தது.
லாபம் ஈட்டிய பங்குகள்
நிஃப்டி 50 இல் பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ லைஃப், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் யுபிஎல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், எச்டிஎஃப்சி லைஃப், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பவர் கிரிட் ஆகியவை பின்தங்கின.
அமெரிக்க வங்கி வட்டி உயர்வு
இது தொடர்பாக ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் கூறுகையில், “உள்நாட்டு சந்தை படிப்படியாக சாதகமான நிலப்பரப்பை நோக்கி நகர்கிறது,
இதற்கிடையில் பெரும்பாலான வங்கிகள் நான்காம் காலாண்டு வருவாய் கணக்கை நேர்மறையாக தாக்கல் செய்துள்ளன. எனினும் அடுத்த வார FED கொள்கை கவனமாக கண்காணிக்கப்படும். எஃப்இடி மேலும் 25 பிபிஎஸ் உயரலாம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“