சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறை யூகங்களுக்கு மத்தியிலும் இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.18% அதிகரித்து 19,341.4 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 0.12% உயர்ந்து 65,075.82 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இன்றைய அமர்வில் நிஃப்டி ரியாலிட்டி குறியீட்டு எண் 1%க்கு மேல் ஏற்றம் கண்டது. யுபிஎல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்டவை அதிக லாபம் ஈட்டின.
அதே நேரத்தில் பார்தி ஏர்டெல், எச்யுஎல், ஆக்சிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை ஐபிஓக்கள் தொடர்பாக தெளிவான காலக்கெடு இல்லாததால் ஏமாற்றமடைந்தன. எனினும் வாகன துறையில் பாஸிடிவ் ஆன செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, மாருதி சுசுகி நிறுவனம் 8 ஆண்டுகளில் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. நிறுவனம் அர்னாப் ராயை புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமித்துள்ளது.
மேலும், உலகின் முதல் எத்தனால் இயங்கும் டொயோட்டா இன்னோவாவை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தச் செய்திகளால் வாகன துறை பங்குகளில் கவனம் செலுத்தப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“