/tamil-ie/media/media_files/uploads/2023/02/Stock-Marker-BSE-red.webp)
சென்செக்ஸ் 0.6% சரிந்து 65,151.02 ஆக காணப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி பங்குகள் சரிந்து காணப்பட்டன.
மேலும், பலவீனமான உலகளாவிய சந்தை உணர்வால் என்எஸ்இ நிஃப்டி-50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் 1% க்கு மேல் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி50 1.08% அல்லது 216 புள்ளிகள் சரிந்து 19,979.15 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 1.2% அல்லது 816 புள்ளிகள் சரிந்து 66,755.66 ஆகவும் இருந்தது.
நிஃப்டி ஐடி 4.6% அல்லது 1,444 புள்ளிகள் சரிந்து 29,701.20 ஆக இருந்தது. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டிலும் இன்ஃபோசிஸ் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது,
நெட்ஃபிக்ஸ் மற்றும் டெஸ்லா முடிவுகள் சந்தை மதிப்பீடுகளைத் தவறவிட்ட பிறகு ஒரே இரவில் தொழில்நுட்ப-கனமான நாஸ்டாக் குறியீட்டில் 2% வீழ்ச்சி உள்நாட்டு ஐடி குறியீட்டைக் கீழே இழுத்தன.
நிஃப்டியில் இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்), ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச்யுஎல்), எச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
அதே சமயம் லார்சன் அண்ட் டூப்ரோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐஎன், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் டிவிஸ் லேபரட்டரீஸ் ஆகியவை லாபம் பெற்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.