இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை 18,800க்குள் கீழ் குறைந்தது. அதாவது, 85 புள்ளிகள் குறைந்து 18,771 ஆக காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 280 புள்ளிகள் வரை 0.45 சதவீதம் சரிந்து 63,238ல் முடிந்தது. நிஃப்டி ஸ்மால்கேப் 100 0.76% மற்றும் நிஃப்டி மிட்கேப் 100 1.06% சரிந்து காணப்பட்டது.
மேலும், நிஃப்டி நெக்ஸ்ட் 50 1.18% சரிந்தது காணப்பட்டது. மறுபுறம், நிஃப்டி மீடியா மற்றும் நிஃப்டி மெட்டல் ஆகியவை மட்டுமே ஓரளவு உயர்ந்த குறியீட்டு எண்களாக இருந்தன.
இதற்கிடையில், வங்கி நிஃப்டி 43,724 ஆகவும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.67% சரிந்தன.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டில் டிவிஸ் லேப், எல்&டி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா நுகர்வோர், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“