இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) லாபத்தை நீட்டித்து, அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 25.85 புள்ளிகள் 0.15% உயர்ந்து 17,769.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 74.61 புள்ளிகள் 0.12% உயர்ந்து 60,130.71 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 42.75 புள்ளிகள் அல்லது 0.10% முன்னேறி 42,678.5 ஆகவும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 52.15 புள்ளிகள் அல்லது 1.31% அதிகரித்து 4,036.35 ஆகவும் இருந்தது.
நிஃப்டி 50 இல் அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிரிட்டானியா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், எச்டிஎஃப்சி லைஃப், யுபிஎல், எச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.
சர்வதேச அளவில் பலவீன குறிப்புகள் காணப்பட்ட நிலையிலும் இன்று இந்தியச் சந்தைகள் லாபத்தில் நிறைவு செய்துள்ளன. US GDP மற்றும் PCE பணவீக்கத் தரவுகளின் வெளியீட்டிற்காக முதலீட்டாளர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க ஃபெடரல் வங்கி மே 3 ஆம் தேதி தங்கள் விகிதங்களை மேலும் 25 பிபிஎஸ் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“