இந்திய உள்நாட்டு குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தது.
சந்தைகள் சீராகத் தொடங்கினாலும், நிஃப்டி 150 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 18,400க்கு மேல் 18,420ல் நிலைத்தது. சென்செக்ஸ் 0.76% உயர்ந்து 61,806 இல் நிறைவடைந்தது.
KFin Technologies முதல் பங்கு வெளீயீடு
இன்றைய (டிச.19) வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறின. நிஃப்டி ஜூனியர் அல்லது நிஃப்டி நெக்ஸ்ட் 50 கிட்டத்தட்ட 1% உயர்ந்தது.
நிஃப்டி ஆட்டோ இன்று 1.59% அதிகரித்து, மிகப்பெரிய துறைசார் லாபம் பெற்றது. KFin Technologies இன் IPO இன்று சந்தாவிற்கு திறக்கப்பட்டது, ஒரு பங்கின் விலை ரூ 347-366 மற்றும் 0.49 முறை சந்தா பெற்றது.
நிஃப்டி லாப, நஷ்ட பங்குகள்
அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், எம்&எம், ஐச்சர் மோட்டார்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை நிஃப்டி 50 குறியீட்டில் இன்று அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதானி போர்ட்ஸ் 4.05% அதிகரித்தது. டிசிஎஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.
பேங்க் நிஃப்டி
NSE வங்கி நிஃப்டி குறியீடு 188 புள்ளிகள் அல்லது வர்த்தகத்தில் 0.44% உயர்ந்து, 43,400-ஐ கடந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/