scorecardresearch

முதலீட்டாளர்களை குளிர்வித்த திங்கள்.. NSE வங்கி நிஃப்டி குறியீடு 188 புள்ளிகள் உயர்வு

திங்கள்கிழமை (டிச.19) வர்த்தகத்தில் நிஃப்டி 150 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 18,400க்கு மேல் 18,420ல் நிலைத்தது. சென்செக்ஸ் 0.76% உயர்ந்து 61,806 இல் நிறைவடைந்தது.

முதலீட்டாளர்களை குளிர்வித்த திங்கள்.. NSE வங்கி நிஃப்டி குறியீடு 188 புள்ளிகள் உயர்வு
இந்திய பங்குச் சந்தை நிலவரம்

இந்திய உள்நாட்டு குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தது.
சந்தைகள் சீராகத் தொடங்கினாலும், நிஃப்டி 150 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 18,400க்கு மேல் 18,420ல் நிலைத்தது. சென்செக்ஸ் 0.76% உயர்ந்து 61,806 இல் நிறைவடைந்தது.

KFin Technologies முதல் பங்கு வெளீயீடு

இன்றைய (டிச.19) வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறின. நிஃப்டி ஜூனியர் அல்லது நிஃப்டி நெக்ஸ்ட் 50 கிட்டத்தட்ட 1% உயர்ந்தது.
நிஃப்டி ஆட்டோ இன்று 1.59% அதிகரித்து, மிகப்பெரிய துறைசார் லாபம் பெற்றது. KFin Technologies இன் IPO இன்று சந்தாவிற்கு திறக்கப்பட்டது, ஒரு பங்கின் விலை ரூ 347-366 மற்றும் 0.49 முறை சந்தா பெற்றது.

நிஃப்டி லாப, நஷ்ட பங்குகள்

அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், எம்&எம், ஐச்சர் மோட்டார்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை நிஃப்டி 50 குறியீட்டில் இன்று அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதானி போர்ட்ஸ் 4.05% அதிகரித்தது. டிசிஎஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.

பேங்க் நிஃப்டி

NSE வங்கி நிஃப்டி குறியீடு 188 புள்ளிகள் அல்லது வர்த்தகத்தில் 0.44% உயர்ந்து, 43,400-ஐ கடந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty ends above 18400 sensex gains 460 pts

Best of Express