இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 50 118 புள்ளிகள் உயர்ந்து 18,716 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 0.67% அதிகரித்து 63,143 ஆகவும் நிறைவடைந்தது.
நிஃப்டி ரியாலிட்டி 3.06% ஆதாயங்களைப் பதிவுசெய்தது. தொடர்ந்து, நிஃப்டி பார்மா 1.12% மற்றும் நிஃப்டி எஃப்எம்சிஜி 1.36% உயர்ந்தன. அதேபோல், நிஃப்டி மிட்கேப் 100 1.22% உயர்ந்தும், நிஃப்டி ஸ்மால்கேப் 0.7% உயர்ந்தும் காணப்பட்டது.
நிஃப்டி 50 குறியீட்டில் டாடா கன்சூமர், சிப்லா, ஐடிசி, டைட்டன் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. கோடக் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எச்சிஎல் டெக் மற்றும் எம்&எம் ஆகியவை குறியீட்டில் அதிக நஷ்டம் அடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“