இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் வெள்ளிக்கிழமை (ஆக.4) உயர்வில் முடிவடைந்தன. இதன்மூலம், 3 நாள் தொடர் இழப்புகள் முடிவுக்கு வந்தன.
தொடர்ந்து, நிஃப்டி-50 19,500 புள்ளிகளுக்கு மேல் 135.35 புள்ளிகள் அதிகரித்து 19,517 இல் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 480 புள்ளிகள் அதிகரித்து 65,721.25 ஆக இருந்தது.
வங்கி நிஃப்டி 0.82% அதிகரித்து 44,879.50 ஆக இருந்தது. நிஃப்டி ஆட்டோ 0.33% சரிந்தது, நிஃப்டி ஐடி, நிஃப்டி கன்ஸ்யூமர் டூரபிள்ஸ் மற்றும் நிஃப்டி பார்மா ஆகியவை வர்த்தகத்தில் சிறந்த துறை வெற்றியாளர்களாக இருந்தன.
பரந்த சந்தைகளில், நிஃப்டி 100, நிஃப்டி 200 மற்றும் நிஃப்டி 500 0.71% முதல் 0.73% வரை உயர்வை பதிவு செய்தன. நிஃப்டி மிட்கேப் 100 0.82% சரிந்தது மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 0.76% சரிந்தது. ஃபியர் கேஜ், இந்தியா VIX, 5.47% குறைந்து 10.57 ஆக இருந்தது.
என்எஸ்இ நிஃப்டி 50 இல், சிப்லா, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, பிபிசிஎல், மாருதி சுசுகி மற்றும் என்டிபிசி ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“