உலகளாவிய கலவையான குறிப்புகளுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகளில் கரடிகளின் ஆட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 187 புள்ளிகள் அல்லது 1.03% குறைந்து 17,914 என்றநிலைகளில் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 631 புள்ளிகள் அல்லது 1.04% குறைந்து 60,115 நிலைகளில் நிறைவடைந்தது.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் 0.5% வரை சரிந்ததால், மற்ற சந்தைகளும் அளவுகோல்களுக்கு ஏற்ப சரிந்தன.
இதற்கிடையில், நிஃப்டி ஆட்டோ குறியீட்டைத் தவிர, அனைத்து துறைகளும் சரிந்து காணப்பட்டன. நிஃப்டி PSU வங்கி 2% க்கு மேல் சரிந்ததால் அனைத்து துறை குறியீடுகளிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
நிஃப்டி, சென்செக்ஸ்
சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், நிஃப்டி 17,950க்கு கீழேயும் வர்த்தகமானது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன. பேங்க் நிஃப்டியை பொறுத்தவரை கிட்டத்தட்ட 1 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/