இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (மே 5) நஷ்டத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 186.8 புள்ளிகள் அல்லது 1.02% சரிந்து 18,069.00 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 694.96 அல்லது 1.13% குறைந்து 61,054.29 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 1,024.25 புள்ளிகள் அல்லது 2.34% சரிந்து 42,661.2 ஆக காணப்பட்டது. தொடர்ந்து, நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 455.5 புள்ளிகள் அல்லது 2.34% குறைந்து 19,023.85 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை
இதற்கிடையில், டைட்டன், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், நெஸ்லே மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், எச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி, இண்டஸ்இண்ட் வங்கி, ஹிண்டால்கோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“