ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்றுகள் அதிகரித்துள்ளதால், அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்திய முக்கிய குறியீடுகள் இன்ட்ராடே வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கத்தைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 61,067 ஆக முடிந்தது. தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 18200 க்கு கீழே சரிந்து 1.01% குறைந்து 18,199 இல் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி மிட்கேப் 100 1.58% குறைந்து, நிஃப்டி ஸ்மால்கேப் 100 2.24% இழந்ததால் சந்தைகள் வர்த்தகத்தில் சரிந்தன.
துறைரீதியாக, நிஃப்டி பார்மா குறியீட்டு எண் வர்த்தகத்தில் 2%க்கும் அதிகமாக உயர்ந்தது. மறுபுறம், வங்கி நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ மற்றும் நிஃப்டி மீடியா குறியீடுகள் மிகவும் சரிந்தன. வங்கி நிஃப்டி 43,000 புள்ளிகளைக் கைவிட்டு, 1.7% சரிந்து 42,617 ஆக முடிந்தது.
நிஃப்டி அதிக லாபம், நஷ்டம்
திவிஷ் லேப், சிப்லா, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டி ஆகியவை நிஃப்டி 50 இன் சிறந்த லாபத்தை ஈட்டின.
அதே நேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை குறியீட்டின் மிகப்பெரிய அளவில் பின்தங்கின. அதிகப்பட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் 6% இழப்பை சந்தித்தது.
இந்நிலையில், இன்றைய புதன்கிழமை (டிச.21) வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 61,067 ஆக முடிந்தது. என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 18200 க்கு கீழே சரிந்து 1.01% குறைந்து 18,199 இல் முடிந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/