Share Market News Today : எதிர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் செவ்வாய் கிழமை (ஆக.8) அமர்வை சிவப்பு நிறத்தில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 26.45 புள்ளிகள் அல்லது 0.13% குறைந்து 19,570.85 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 106.98 புள்ளிகள் அல்லது 0.16% சரிந்து 65,846.50 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 126.95 புள்ளிகள் அல்லது 0.28% உயர்ந்து 44,964.45 ஆகவும், நிஃப்டி ஐடி 0.15% ஆகவும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 3.37% ஆகவும், நிஃப்டி பார்மா 0.64% ஆகவும் உயர்ந்தது.
நிஃப்டி ஆட்டோ 0.31% சரிந்தது. தொடர்ந்து, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.28%, நிஃப்டி மெட்லா 1.17%, நிஃப்டி ரியாலிட்டி 0.18% சரிந்தன.
நிஃப்டி-50 இல் எஸ்பிஐ லைஃப், ஹீரோ மோட்டோகார்ப், சிப்லா, டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ, மஹிந்திரா & மஹிந்திரா, டிவிஸ் லேப் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை பின்தங்கின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“