இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை (மே 11) லாபத்தில் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்படுகிறது.
பேங்க் நிஃப்டி 43500 ஆக காணப்படுகிறது. அதேநேரத்தில் அதானி எண்டர்டெயின்ட் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை லாபத்தில் வர்த்தகமாகிவருகின்றன.
இதற்கிடையில், சிங்கப்பூர் எக்சேஞ்சில் (SGX) நிஃப்டி ஃபியூச்சர் இன்று அதிகாலை வர்த்தகத்தில் 30 புள்ளிகள் அல்லது 0.16% உயர்ந்து 18,388 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மற்ற ஆசிய சந்தைகளும் கலப்பில் வர்த்தகத்தை தொடர்கின்றன. அந்த வகையில், ஹாங்காங்கின் ஹாங் செங் 0.07%ம், ஜப்பானின் நிக்கேய் 225 0.2%ம் சரிந்தன.
சீனாவின் ஷாங்காய் கூட்டு 0.17% ம், தென் கொரியாவின் KOSPI 0.44%ம் உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் NSE நிஃப்டி 49.15% அல்லது 0.27% உயர்ந்து 18,315.1 ஆகவும், BSE சென்செக்ஸ் 178.87 புள்ளிகள் அல்லது 0.29% உயர்ந்து 61,940.2 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“