Advertisment

72 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்; ஆட்டோ பங்குகள் காட்டில் மழை

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் பிபிசிஎல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 0.45% அதிகரித்து 21,840.05 ஆகவும், பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 0.39% உயர்ந்து 71,833.17 ஆகவும் காணப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (பிப்.14,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 96.80 புள்ளிகள் அல்லது 0.45% அதிகரித்து 21,840.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 277.98 புள்ளிகள் அல்லது 0.39% உயர்ந்து 71,833.17 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

பரந்த குறியீடுகள் பச்சை நிறத்தில் காணப்பட்டன. லார்ஜ்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் முன்னணியில் இருந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 405.90 புள்ளிகள் அல்லது 0.89% உயர்ந்து 45,908.30-ல் முடிந்தது.
ஐடி  (IT) மற்றும் பார்மா (Pharma) பங்குகள் வீழ்ச்சியடைந்த நிலையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆட்டோ பங்குகள் சிறப்பாக செயல்பட்டன.
அந்த வகையில், நிஃப்டி PSU வங்கி பங்குகள் 2.92% உயர்ந்து 6,912.45 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது. நிஃப்டி PSU பங்குகளில் முக்கிய லாபம் ஈட்டிய வங்கிகள் பட்டியலில் இந்தியன் வங்கி (6.94%), எஸ்பிஐ (4.79%), பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி (4.48%) மற்றும் யூகோ (UCO) வங்கி (3.80%) ஆகியவை உள்ளன.

என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் பிபிசிஎல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment