/tamil-ie/media/media_files/uploads/2019/05/z652-1.jpg)
Nifty on its worst run in 8 years, sensex crashes 372 points
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 0.99% மற்றும் நிஃப்டி 1.16% சரிவுடன் நிறைவடைந்துள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணானசென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1500.27 புள்ளிகளும், நிஃப்டி 433.35 புள்ளிகளும் சரிவடைந்து இருந்தன.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று, சென்செக்ஸ் 0.99% சரிந்து 37,090.82 புள்ளிகளுடன் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1.16% சரிந்து 11,148.2 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு நிஃப்டி வீழ்ச்சி பெற்றிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், தொடர்ச்சியாக 9வது நாளாக சென்செக்ஸ் சரிவு அடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.