இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகளான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் வியாழக்கிமை (ஆக.24) அமர்வை நஷ்டத்தில் நிறைவு செய்தன.
இன்றைய அமர்வில் என்எஸ்இ குறியீடு 1% அல்லது 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 19,386.70 ஆக காணப்பட்டது. மறுபுறம், சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்து 65,252.34 புள்ளிகளாக இருந்தது.
பரந்த சந்தைகளில், நிஃப்டி மிட்கேப் 100 சிறப்பாக செயல்பட்டாலும், நிஃப்டி ஸ்மால்கேப் 0.35% சரிந்தது. நிஃப்டி ஐடி சாதகமான என்விடியா வருவாயில் 0.6% அதிகரித்தது, அதே நேரத்தில் பேங்க் நிஃப்டி பிளாட் ஆனது. உலோகங்கள், பார்மா மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வங்கி கவுன்டர்கள் சரிவுடன் முடிவடைந்தன.
எனினும், எஃப்எம்சிஜி மற்றும் மீடியா பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. தங்கத்தை பொறுத்தவரை வலுவான டாலர் மற்றும் உயர்ந்த வட்டி விகிதங்களின் தாக்கம் காரணமாக கணிசமாக உயரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“