இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.
இந்திய பங்குச் சந்தைகள்
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 43.05 புள்ளிகள் அல்லது 0.25% சரிந்து 17,511.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 139.18 புள்ளிகள் அல்லது 0.23% சரிந்து 59,605.80 ஆகவும் இருந்தது.
வங்கி நிஃப்டி 5.65 புள்ளிகள் அல்லது 0.01% உயர்ந்து 40,001.55-ல் முடிவடைந்தது. நிஃப்டி ஆட்டோ 0.06 சதவீதமும், நிஃப்டி ஐடி 0.03% சரிந்தது.
நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.53% லாபம் ஈட்டியது. மேலும், நிஃப்டி மெட்டல் 0.35% உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில், ஹிண்டால்கோ (1.79%), கோல் இந்தியா (1.63%), ஆக்சிஸ் வங்கி (1.58%), JSW ஸ்டீல் (1.33%) மற்றும் டாடா மோட்டார்ஸ் (1.29%) லாபம் அதிகரித்து காணப்பட்டது.
ஏசியன் பெயிண்ட்ஸ் (3.18% சரிவு), லார்சன் & டூப்ரோ (1.86% சரிவு), டைட்டன் (1.63% சரிவு), டிவிஸ் லேப் (1.56% சரிவு) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (1.44% சரிவு) ஆகியவை நஷ்டமடைந்தன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.14% உயர்ந்து 82.74 ஆக இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகள்
ஆசிய சந்தைகள் பெரும்பாலும் நஷ்டத்தில் நிறைவடைந்தன. சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.11% சரிந்தது.
தென் கொரியாவின் KOSPI 0.89% உயர்ந்தது. ஜப்பானின் Nikkei 225 1.34% சரிந்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் 0.35% சரிந்தது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 303 புள்ளிகள் அல்லது 0.54% குறைந்து ரூ. 55,780.00 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
மார்ச் டெலிவரிக்கான வெள்ளி 506 புள்ளிகள் அல்லது 0.77% சரிந்து ரூ.64,932.00 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய்
மார்ச் டெலிவரிக்கான WTI கச்சா 0.57% அதிகரித்து $74.37 ஆக இருந்தது. அதே சமயம் மார்ச் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் 0.61% உயர்ந்து $81.09 ஆக வர்த்தகமானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/