புதன்கிழமை (பிப்.22, 2023) உள்நாட்டு குறியீடுகள் பெரும் இழப்பை சந்தித்தன, நிஃப்டி 17,560 க்கும், சென்செக்ஸ் 59,750 க்கும் கீழும் வீழ்ச்சி கண்டது.
பேங்க் நிஃப்டி முக்கியமான நிலையைத் தாண்டி 40,000 க்கு கீழே முடிவடைந்தது. இதற்கிடையில், நிஃப்டி 50 இல் ஐடிசி (0.50% வரை) மற்றும் பஜாஜ் ஆட்டோ (0.26% வரை) மட்டுமே லாபம் ஈட்டியது.
சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி
மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ் (11.05% சரிவு), அதானி போர்ட்ஸ் (7.24% சரிவு), கிராசிம் (3.44% சரிவு), பஜாஜ் ஃபைனான்ஸ் (2.94% சரிவு) மற்றும் JSW ஸ்டீல் (2.79% சரிவு) ஆகியன நஷ்டமடைந்தன.
தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 272.40 புள்ளிகள் அல்லது 1.53% சரிந்து 17,554.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 927.74 புள்ளிகள் அல்லது 1.53% சரிந்து 59,744.98 ஆகவும் இருந்தது.
அனைத்து துறை குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி 677.70 புள்ளிகள் அல்லது 1.67% குறைந்து 39,995.90 இல் நிறைவடைந்தது,
நிஃப்டி ஆட்டோ 1.21%, நிஃப்டி ஐடி 1.10%, நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.91% , நிஃப்டி மெட்டல் 2.64% சரிந்தது.
ஆசிய சந்தைகள்
ஆசிய சந்தைகளும் புதன்கிழமை வர்த்தகத்தை நஷ்டத்தில் முடித்தன. சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.47% சரிந்தது. தென் கொரியாவின் KOSPI 1.68% சரிந்தது.
ஜப்பானின் நிக்கேய் 225 1.34% சரிந்தது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.51% சரிந்தது.
கச்சா எண்ணெய்
மார்ச் டெலிவரிக்கான WTI கச்சா எண்ணெய் 1.75% குறைந்து $75.02 ஆக இருந்தது. அதே நேரத்தில் மார்ச் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் 1.43% குறைந்து $81.86 இல் பிற்பகல் 3:55 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 28 புள்ளிகள் அல்லது 0.05% குறைந்து ரூ. 56,140.00 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
மார்ச் டெலிவரிக்கான வெள்ளி எதிர்காலம் 305 புள்ளிகள் அல்லது 0.46% சரிந்து ரூ.65,747.00 ஆக இருந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு
பிற்பகல் 3:52 மணிக்கு (IST) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05% குறைந்து 82.85 ஆக இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.