இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை நஷ்டத்தில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 17500க்கு கீழே நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 59500க்கு கீழே முடிந்தது.
பேங்க் நிஃப்டி39950க்கு கீழே முடிவடைந்தது. இந்நிலையில், தேசிய பங்குச் சந்தையில் ஓ.என்.ஜி.சி (2.62%), அதானி போர்ட்ஸ் (1.44%), ஏசியன் பெயிண்ட் (1.31%), டிவிஸ் லேப் (1.28% உயர்வு) ) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை (0.99% வரை) அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ் (5.11% சரிவு), ஹிண்டால்கோ (4.72% சரிவு), மஹிந்திரா & மஹிந்திரா (2.55% சரிவு), JSW ஸ்டீல் (2.41% சரிவு) மற்றும் டாடா ஸ்டீல் (1.96% சரிவு) ஆகியவை வீழ்ச்சிகண்டன.
இந்திய ரூபாய் மதிப்பு
பிற்பகல் 3:50 மணிக்கு (IST) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.01% சரிந்து 82.75 ஆக காணப்பட்டது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 58 புள்ளிகள் அல்லது 0.10% உயர்ந்து ரூ. 55,645.00 ஆகவும், மார்ச் டெலிவரிக்கான வெள்ளி 221 புள்ளிகள் அல்லது 0.34% குறைந்து ரூ.64,130 ஆகவும் இருந்தது.
கச்சா எண்ணெய்
மார்ச் டெலிவரிக்கான WTI கச்சா 1.26% அதிகரித்து $76.34 ஆக இருந்தது. அதே சமயம் மார்ச் டெலிவரிக்கான ப்ரெண்ட் கச்சா 1.25% உயர்ந்து $83.24 இல் பிற்பகல் 3:52 மணிக்கு (IST) வர்த்தகமானது.
ஆசிய சந்தைகள் சரிவு
சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.62% சரிந்தது. தென் கொரியாவின் KOSPI 0.63% சரிந்தது.
ஜப்பானின் Nikkei 225 1.29% உயர்ந்தது மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1.68% சரிந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/