Share Market News Today : இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 17,722 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்ந்து 60,152 ஆகவும் காணப்பட்டது.
வங்கி பங்குகள் குறியீட்டு எண், பேங்க் நிஃப்டி 1.3 சதவீதம் உயர்ந்து 41,366ல் நிறைவடைந்தது. தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி லாபத்தில் முன்னணியில் காணப்பட்டது.
துறை ரீதியாக, நிஃப்டி பிஎஸ்யு வங்கி, நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி ஆட்டோ ஆகியவை வர்த்தகத்தில் 1.7% வரை உயர்ந்தன.
நிஃப்டி 50 குறியீட்டில் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டிய படடியலில் கோடக் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஐச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் டாடா ஸ்டீல் முன்னணியில் உள்ளன.
அதேநேரம், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், விப்ரோ மற்றும் டெக்எம் நிறுவனங்கள் சரிவை கண்டன. தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 5.6 சதவீதம் வரை உயர்வை கண்டன.
அந்த வகையில் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 7ஆவது நாளாக உயர்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“