scorecardresearch

சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம், கச்சா.. ஆட்டம் கண்ட ஆசிய சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) வர்த்தகத்தை நஷ்டத்தில் முடிவு செய்தன.

Stock Market Today 24 March 2023
வெள்ளிக்க்கிழமை வர்த்தகத்தை இந்திய சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 111.00 புள்ளிகள் அல்லது 0.65% சரிந்து 17,043.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 337.66 புள்ளிகள் அல்லது 0.58% சரிந்து 57,900.19 ஆகவும் இருந்தது.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 153.30 புள்ளிகள் அல்லது 0.39% சரிந்து 39,411.40 ஆக காணப்பட்டது.
தொடர்ந்து, நிஃப்டி ஐடி 1.65%, நிஃப்டி ஆட்டோ 0.89%, நிஃப்டி பிஎஸ்யூ வங்கி 1.90%, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.0% சரிந்தது.

லாபம், நஷ்டம்

தேசிய பங்குச் சந்தையில் டைட்டன், பிபிசிஎல், லார்சன் அண்ட் டூப்ரோ, பார்தி ஏர்டெல் மற்றும் சன் பார்மா ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டிசிஎஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள் பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை அமர்வை நஷ்டத்தில் நிறைவு செய்தன. முக்கிய குறியீடுகள் 2% க்கு மேல் சரிந்தன.
ஹாங்காங்கின் ஹாங் செங் 2.27%, தென் கொரியாவின் KOSPI 2.57%, ஜப்பானின் நிக்கேய் 225 2.19% மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.72% சரிந்தன.

அமெரிக்க சந்தை

டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.28% வீழ்ச்சியுடன் ஒரே இரவில் அமெரிக்க சந்தை முடிந்தது,

இந்திய பண மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 3:25 மணிக்கு (IST) 0.39% குறைந்து 82.24 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய்

ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 2.41% குறைந்து $73.00 ஆக இருந்தது, அதே சமயம் ஏப்ரல் டெலிவரிக்கான ப்ரெண்ட் கச்சா 1.93% குறைந்து $79.21 இல் பிற்பகல் 3:30 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.

தங்கம், வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான தங்கம் 192 புள்ளிகள் அல்லது 0.33% குறைந்து மதியம் 3:30 மணிக்கு (IST) ரூ. 57,450.00 ஆக இருந்தது, மே டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 576 புள்ளிகள் அல்லது 0.86% குறைந்து ரூ.66,076.00 ஆக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty sensex fall rupee depreciates asia us markets updates