தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 13.45 புள்ளிகள் அல்லது 0.08% உயர்ந்து 16,985.60 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 78.94 புள்ளிகள் அல்லது 0.14% உயர்ந்து 57,634.84 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 81.10 புள்ளிகள் 0.21% உயர்ந்து 9,132.60 ஆகவும், நிஃப்டி ஐடி 0.69% ஆகவும், நிஃப்டி ஆட்டோ 0.19% ஆகவும், நிஃப்டி பிஎஸ்யூ வங்கி 0.57% ஆகவும், நிஃப்டி எஃப்எம்சிஜி 1.14% ஆகவும் இருந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.16% குறைந்து 82.73 ஆக இருந்தது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான தங்கம் 173 புள்ளிகள் அல்லது 0.30% குறைந்து ரூ. 58,163 ஆக இருந்தது.
அதே நேரத்தில் மே டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 101 புள்ளிகள் அல்லது 0.15% அதிகரித்து ரூ.67,400 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய்
ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 0.83% அதிகரித்து $68.20 ஆக இருந்தது. அதே சமயம் ஏப்ரல் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் 1.02% உயர்ந்து $74.44க்கு பிற்பகல் 3:55 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆசிய பங்குச் சந்தைகள்
ஆசிய சந்தைகள் வியாழக்கிழமை அமர்வை நஷ்டத்தில் நிறைவு செய்தன.
ஹாங்காங்கின் ஹாங் செங் 1.72%, தென் கொரியாவின் KOSPI 0.08%, ஜப்பானின் Nikkei 225 0.80% சரிந்தது.
அதேபோல், சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடும் 1.12% சரிந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/