Advertisment

தொடர் சரிவில் தங்கம்.. ஜப்பான் 'ஜம்ப்'.. ஆட்டம் கண்ட ஆசியா

இன்றைய பங்கு வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன. துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 320.35 புள்ளிகள் அல்லது 0.77% சரிந்து 41,256.75 ஆக காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Nifty settles below 19350 Sensex tanks 500 pts

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 07 ஜூலை 2023

இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை அமர்வை நஷ்டத்தில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 164.80 புள்ளிகள் அல்லது 0.93% சரிந்து 17,589.60 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 541.81 புள்ளிகள் அல்லது 0.90% குறைந்து 59,806.28 ஆகவும் இருந்தது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 320.35 புள்ளிகள் அல்லது 0.77% சரிந்து 41,256.75 ஆக காணப்பட்டது. மேலும், நிஃப்டி ஆட்டோ 1.83%, நிஃப்டி ஐடி 1.01%, நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.13%, நிஃப்டி ரியால்டி 1.17 சதவீதமும் சரிந்தது.

தேசிய பங்குச் சந்தை

டாடா ஸ்டீல் (1.60%), லார்சன் அண்ட் டூப்ரோ (1.02%), அப்பல்லோ மருத்துவமனை (0.82%), பார்தி ஏர்டெல் (0.78%) மற்றும் சிப்லா (0.60% வரை) ஆகியவை நிஃப்டி 50 இன் அதிக லாபம் பெற்றவை ஆகும்.
மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ் (4.82% சரிவு), மஹிந்திரா & மஹிந்திரா (3.47% சரிவு), எஸ்பிஐ லைஃப் (2.81% சரிவு), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (2.37% சரிவு) மற்றும் அதானி போர்ட்ஸ் (2.24% சரிவு) ஆகியவை நஷ்டமடைந்தன.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.10% அதிகரித்து 8197 ஆக இருந்தது.

தங்கம், வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான தங்கம் 36 புள்ளிகள் அல்லது 0.07% உயர்ந்து மாலை 3:00 மணிக்கு (IST) ரூ.54,947.00 ஆக இருந்தது.
தொடர்ந்து, மே டெலிவரிக்கான மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 1 புள்ளி குறைந்து ரூ.61,816.00 ஆக வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெய்

ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 0.51% குறைந்து $76.27 ஆக இருந்தது, அதே சமயம் ஏப்ரல் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் 0.33% குறைந்து $82.39 இல் பிற்பகல் 3:00 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள் வியாழக்கிழமை அமர்வை பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் முடித்தன.
ஹாங்காங்கின் ஹாங் செங் 0.63% சரிந்தது, தென் கொரியாவின் KOSPI 0.53% சரிந்தது,
சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.22% சரிந்தது, ஜப்பானின் Nikkei 225 0.63% உயர்ந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stock Market Nifty Sensex Bombay Stock Exchange Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment