இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய வணிகத்தை உயர்வுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 60,340க்கு மேலேயும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 17750க்கு மேலேயும் முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை
பேங்க் நிஃப்டி-ஐ பொறுத்தமட்டில் 41550க்கு மேல் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில், இண்டஸ்இண்ட் வங்கி (4.81%), அதானி போர்ட்ஸ் (3.06%), அதானி எண்டர்பிரைசஸ் (2.83%), பஜாஜ் ஆட்டோ (2.20% வரை) மற்றும் லார்சன் & டூப்ரோ ( 1.44%) லாபம் ஈட்டின.
மறுபுறம் பஜாஜ் ஃபைனான்ஸ் (2.20% சரிவு), ஹிண்டால்கோ (1.39% சரிவு), டெக் மஹிந்திரா (1.02% சரிவு), இன்ஃபோசிஸ் (0.96% சரிவு) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை (0.84% சரிவு) சரிவை கண்டது.
ஆசிய பங்குச் சந்தை
ஆசிய சந்தைகள் புதன்கிழமை அமர்வை பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் முடித்தன.
ஹாங்காங்கின் ஹாங் செங் 2.35%, தென் கொரியாவின் KOSPI 1.28% மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.06% சரிந்தது,
எனினும் ஜப்பான் சந்தைகள் லாபத்தில் வணிகமாகின.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 3:05 மணிக்கு (IST) 0.11% குறைந்து 82 ஆக இருந்தது.
தங்கம், வெள்ளி
மே டெலிவரிக்கான மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 363 புள்ளிகள் அல்லது 0.58% குறைந்து ரூ.61,843.00 ஆகவும், ஏப்ரல் டெலிவரிக்கான தங்கம் 108 புள்ளிகள் அல்லது 0.20% குறைந்து ரூ. 54,914.00 ஆக பிற்பகல் 3:15 மணிக்கு (IST) இருந்தது.
கச்சா எண்ணெய்
ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 0.27% குறைந்து $77.37 ஆக இருந்தது. அதே சமயம் ஏப்ரல் டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் 0.19% குறைந்து $83.13 இல் பிற்பகல் 3:15 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/