scorecardresearch

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்; தங்கம், வெள்ளி விலை சரிவு

புதன்கிழமை வர்த்தகத்தை சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு செய்தன. துறைசார் குறியீடுகளில், வங்கி நிஃப்டி 0.20%, நிஃப்டி ஐடி 1.13%, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.03%, நிஃப்டி பிஎஸ்யு வங்கி 0.48% உயர்ந்து, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.39% சரிந்து காணப்பட்டது.

Today Nifty and Sensex 15 February 2023
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் ரூ. 56,161.00 ஆக உள்ளது.

இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் புதன்கிழமை அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன. சென்செக்ஸ் 61,250க்கு மேலேயும், நிஃப்டி 18,000க்கு மேலேயும் முடிவடைந்தது.

சென்செக்ஸின் அதிகபட்ச லாபத்தை டெக் மஹிந்திரா (5.79%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (2.22%), பஜாஜ் ஃபின்சர்வ் (1.44%), பார்தி ஏர்டெல் (1.24%) மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா (1.19% வரை) உள்ளிட்ட நிறுவனங்கள் ஈட்டின.

மறுபுறம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் (1.22% சரிவு), ஐடிசி (1.14% சரிவு), சன் பார்மா (1.12% சரிவு), HDFC (0.70% சரிவு) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (0.62% சரிவு) ஆகியவை நஷ்டமடைந்தன.

இந்திய ரூபாயின் மதிப்பு

மாலை 4:05 மணிக்கு (IST) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05% குறைந்து 82.80 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய்

மார்ச் டெலிவரிக்கான WTI கச்சா எண்ணெய் 1.42% குறைந்து $77.93 ஆகவும், பிரென்ட் க்ரூட் 1.25% குறைந்து $84.51 ஆக மாலை 4:08 மணிக்கு (IST) வர்த்தகமானது.

தங்கம், வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் ரூ. 56,161.00 குறைந்து 589 புள்ளிகள் அல்லது 1.04% ஆக உள்ளது.
மார்ச் மாத டெலிவரிக்கான வெள்ளி 972 புள்ளிகள் அல்லது 1.47% குறைந்து ரூ. 65,279.00 ஆக காணப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty sensex rise rupee falls in today trade

Best of Express