Advertisment

பொன் கொடுத்த புதன்.. சரிந்த தங்கம், நிமிர்ந்த ரூபாய்

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை அமர்வை உயர்வுடன் நிறைவு செய்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Share Market Today 26 June 2023

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 26 ஜூன் 2023

இன்றைய பங்கு வர்த்தகத்தில் NSE நிஃப்டி-50 159 புள்ளிகள் அல்லது 0.91% உயர்ந்து 17,557.05 ஆகவும், BSE சென்செக்ஸ் 582.87 புள்ளிகள் அல்லது 0.99% உயர்ந்து 59,689.31 ஆகவும் இருந்தது.

அதேபோல், நிஃப்டி ஐடி 1.20% உயர்ந்தது, எனினும், நிஃப்டி ஆட்டோ 0.55% சரிந்து காணப்பட்டது. தொடர்ந்து, நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.79% சரிந்தது, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.36% உயர்ந்தது மற்றும் நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ் 1.14% உயர்ந்தது.

Advertisment

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள் பெரும்பாலும் நஷ்டத்தில் நிறைவடைந்தன. ஜப்பானின் நிக்கேய் 225 1.68% சரிந்தது.

ஆசியா டவ் 1.01% சரிந்தது, எனினும், தென் கொரியாவின் KOSPI 0.59% உயர்ந்தது. சீனாவின் ஷாங்காய் கம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை புதன்கிழமை மூடப்பட்டிருந்தன.

இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.40% உயர்ந்து 82 ஆக இருந்தது.

தங்கம், வெள்ளி

ஜூன் டெலிவரிக்கான தங்கம் 47 புள்ளிகள் அல்லது 0.08% குறைந்து மதியம் 3:20 மணிக்கு (IST) ரூ. 60,907 ஆக இருந்தது. மே டெலிவரிக்கான மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 171 புள்ளிகள் அல்லது 0.23% குறைந்து ரூ.74,447 ஆக வர்த்தகமானது.

கச்சா எண்ணெய்

மே டெலிவரிக்கான WTI கச்சா 0.24% குறைந்து $80.52 ஆக இருந்தது, அதே சமயம் மே டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் 0.05% குறைந்து $84.90க்கு பிற்பகல் 3:20 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Nse Sensex Crude Oil Prices Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment